திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பெற்றோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகாமையில் ஹெரோயினுடன் நபரொருவர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதனோடு சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.