கொட்டகலை சுகாதார பிரிவில் நாளை முதல் 3 நாட்களுக்கு விசேட தடுப்பூசி திட்டம்!

கொட்டகலை பிரதேச சபை மற்றும் கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை  நாளை (07) முதல் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது – என்று கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவருமான இராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

கொட்டகலை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், குறித்த சந்தர்ப்பங்களின்போது தடுப்பூசி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை தடுப்பூசி ஏற்றப்படும் எனவும், இதுவரையில் தடுப்பூசி பெறாதவர்கள் வந்து அதனை பெற்றுக்கொள்ளுமாறு இராஜமணி பிரசாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

Related Articles

Latest Articles