கொட்டகலை சுரங்கப்பாதையில் நீர் கசிவு! பேராபத்து தடுக்கப்படுமா?

ஹட்டன் –  நுவரெலியா பிரதான பாதையில் அமைந்துள்ள புதிய சுரங்க வழி பாதை தற்போது ஆபத்தினை ஏற்படுத்தும் ஓர் இடமாக மாறிவருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேற்படி சுரங்கத்தில் பல இடங்களில் பெரிய அளவில் நீர் கசிந்து குழாயில் ஊற்றுவது போல் நீர் ஊற்றுக்கின்றன.

இவ்வாறு தொடர்ச்சியாக நீர் கசிவதால் வீதி வழுக்கும் அபாயமும் காணப்படுகின்றது.

நீர் மேலிலிருந்து கீழ் நோக்கி விழுவதால் மோட்டர் சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்கள் பல்வேறு ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளன.

சுரங்கத்தில் பொறுத்தப்பட்டுள்ள மின் விளக்குகளில் நீர் கசிவதனால் தற்போது மின்குழில்கள்,செயலிழந்து பெரும் இருட்டாக காணப்படுகின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிக சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.

இதே வேளை இந்த ஆட்சி ஆரம்பித்த காலப்பகுதியில் இளைஞர்கள் யுவதிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பாரிய அளவில் நிதியினை செலவு செய்து பல நாட்டகளாக தீட்டிய ஓவியங்கள் தற்போது நீர் கசிவு காரணமாக அழிந்துவருகின்றது.

தொடர்ச்சியாக நீர் கசிவதனால் சுரங்கத்தின் உறுதி சீர்குலைந்து இடியும் ஆபத்தினையும் எதிர்நோக்கலாம் எனவும் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் ஆரம்பித்திலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles