‘கொட்டகலை பகுதியில் கொரோனா தொற்று அபாயம் இல்லை’

” கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்றபோதிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும்.” – என்று கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும், அங்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இது தொடர்பில் தவிசாளரிடம் வினவியபோது அவர் கூறியதாவது,

” கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 10 வட்டாரங்கள் உள்ளன, 5 குடும்பங்கள் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டன. அக்குடும்ப உறுப்பினர்களிடம் பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. பீசீஆர் பரிசோதனை முடிவு எமக்கு கிடைத்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டிருந்த எவருக்கும் கொவிட் – 19 வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதியானது.

எனவே, இப்பகுதியில் வைரஸ் பரவும் என வீண் அச்சம் கொள்ளவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன், அச்சம் கொள்ள வேண்டாம் என்பது, வழமைபோல் சுதந்திரமாக செயற்படுங்கள் என்பது பொருள் அல்ல,  முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி செயற்படுமாறு கோருகின்றேன்.

கொட்டகலை பிரதேசத்தில் விளையாட்டு நிகழ்வுகளை இடைநிறுத்தியுள்ளோம். எவராவது திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தினால் அது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையுடனேயே (25 -50) நடைபெறவேண்டும்.

அதேவேளை, வெளி மாவட்டங்களில் இருந்து எவராவது வந்தால் அது தொடர்பில் பிரதேச சபைக்கு தகவல் வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன், ஏனெனில் வைரஸ் என்பது கண்ணுக்கு தெரியாது, ஆனால் ஏதோவொரு விதத்தில் பரவக்கூடும். எனவேதான் பொது மக்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles