அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீர் பீப்பாய் ஒன்றில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குறித்த கைதி கொதிநீர் பீப்பாயில் விழுந்தமையால் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் உத்தியோகத்தர்கள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
