போனஸ் கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை வீ.டி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருடாந்தம் தமக்கு ஏப்ரல் மாதம் போனஸ் வழங்கப்படும் எனவும், இம்முறை இதுவரையில் வழங்கப்படாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியே நீதி கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போராட்டக்காரர்கள்,
” காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து வந்து ,பிறகு மாலை 6 மணிக்கு வீடுகளுக்கு செல்கின்றோம். இடையில் ஆடைத்தொழிற்சாலையில் பல்வேறு இன்னல்கள்.
சம்பளம் குறைவாக காணப்பட்டாலும் பொருளாதார சிக்கலால் வேலைப்பார்கின்றோம்.
நாங்கள் கஸ்டப்பட்டு வேலைப்பார்த்து வருடத்தில் மிஞ்சுவது இந்த போனஸ் பணம் மட்டும் தான். அதையும் இம்முறை தரமுடியாது என நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.” – என குறிப்பிட்டனர்.
தகவல் – நீலமேகம் பிரசாந்த்