குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட 20 தோட்டத் தொழிலாளர்கள் சிகிச்சைகளுக்காக கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொத்மலை, வெதமுல்ல லிலிஸ்லேன்ட் தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களையே இன்று முற்பகல் குளவிகள் சரமாரியாக கொட்டியுள்ளன.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட 20 ஆண் தோட்டத் தொழிலாளர்களும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களில் 04 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
க.கிசாந்தன்
