பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரான்கான் கைதைக் கண்டித்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் தொடர்ந்து வன்முறை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது பல நகரங்களுக்கும் பரவி வருகிறது. நாடு முழுவதும் காலவரையின்றி இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் கட்சியினர் பொலிஸ் அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களைவும் வீசுவதாகவும், மரங்களையும், அரசு சொத்துகளையும் தீ வைத்து கொளுத்துவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெஷாவரில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கும், ஆம்புலன்ஸ் ஒன்றுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
வன்முறைகளில் குறைந்தது 8 பேர் பலியாகினர். 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கராச்சியில் அரங்கேறிய வன்முறையில் 270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் கலவரங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துங்குவா மாகாணத்திலும் ராணுவத்தை அனுப்புமாறு பாகிஸ்தான் அரசைக் கேட்டுள்ளனர். லாகூரில் ஷாத்மேன் போலீஸ் நிலையத்தை இம்ரான்கான் கட்சியினர் தாக்கினர்










