கொரோனாவால் ஒரு வயது குழந்தை பலி!

13 மாத ஆண் குழந்தையொன்றுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகி, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி (இன்று) 15-11-2021ல் உயிரிழந்துள்ளது.

இக் குழந்தைக்கு மேற்கொண்ட ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனையின் போதே, குழந்தை கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியமை தெரிய வந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் சடலம் இன்றைய தினமே, தகனம் செய்யப்படுமென்றும் பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் ஜீவந்த பிரசன்ன தெரிவித்தார்.

இதே நிலையில், இப்பகுதியின் கொங்கம ஆரம்பப் பாடசாலை அதிபருக்கும் மாணவர்கள் இருவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அதனால் அப்பாடசாலை 15-11-2021ல் தொடக்கம் மூடிவிட உத்தரவிட்டிருப்பதாகவும், பொது சுகாதாரப் பரிசோதகர் ஜீவந்த பிரசன்ன மேலும் தெரிவித்தார்.

இப்பாடசாலை மூடப்பட்டிருப்பதை, பண்டாரவளை கல்வி வலயமும் உறுதி செய்துள்ளது. இவ் அதிபருடனும், மாணவர்கள் இருவருடனும் தொடர்புகளைப் பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles