கொரோனா வைரஸ் தாக்கத்தால் கம்பளை, கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவர் நேற்று (15) உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக அவர் கடந்த 8 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.










