“கொவிட்- 19 தொற்றின் பாதிப்பாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர்தொழில்களை இழக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தொழில் இழந்த சகலருக்கும் 10000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவாக வழங்கப்படும். வெளிநாடுகளில் தொழில்களை இழந்து நாடு திரும்புவோருக்கும் இந்த நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல தலைப்புகளின்கீழ் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
‘பிரச்சினைகளின் முடிச்சுகளை அவிழ்க்கும் திட்டம்’ எனும் தலைப்பின்கீழ் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,
பொருளாதார நெருக்கடிகளால் சிரமப்படும் மக்களை அதிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு அவர்களின் கரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சுயதொழில் வருமானங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தொழில் இழந்தவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இணையான வருமான வழிகளை உருவாக்கப்பட வேண்டும்.
அரசாங்கத் தொழிலில் இடைநிறுத்தப்பட்டுள்ள சகல கொடுப்பனவுகளும் மீள வழங்கப்படும்.
என்டர்பிறைசஸ் ஸ்ரீ லங்கா யோசனை முறைமையின் கீழ் 50 மில்லியனுக்கு குறைந்த கடன் பெற்றவர்களுக்கும் கடனை திருப்பி செலுத்துவதற்கான சலுகைக்காலம் வழங்கப்படும்.
சமூகத்தில் பாதிக்கப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு 10000 ரூபாய்க் கொடுப்பனவு வழங்கப்படும்.
இலங்கையில் சகல தொழில்முயற்சியாண்மைகளும் பாதுகாக்கப்படும். அதற்காக வர்த்தக சந்தையில் காத்திரமான செயற்றிட்டங்கள் மற்றும் ஆபத்தான நிதி செயற்றிட்டங்கள் ஆகியன சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக தனியார் துறைகளுக்கு வழங்கப்பட்டு நிதி பெற்றுக்கொள்ளப்படும்.
கொவிட்-19 ஆசிய அபிவிருத்தி வங்கியின் 20 பில்லியன் அமெரிக்க டொலர் நிவாரண செயற்திட்டம், அத்தகைய சமாந்தரமான செயற்திட்டம் ஊடாக ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு மேலதிகமாக அரசாங்கம் ஊடாக தனியார் வியாபாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்படும்.
இந்த நிதியங்கள் மற்றும் செயற்திட்டம் ஊடாக சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், சிறு தொழில ;முனைவோர்கள் மற்றும் சுயதொழில் தொழில்முனைவோர்களை பலமாக்குவோம். அதற்கான நிதி உதவிகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கு நீண்ட கால அரச பிணை முறிகளை அந்த தொழில்முனைவோர்களுக்கு வழங்குவோம்.” என்றுள்ளது.
இப்படி மேலும் பல திட்டங்களும் உள்ளன.