‘கொரோனா’வால் பதுளை மாவட்டத்தில் இதுவரை 282 பேர் உயிரிழப்பு

பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் ஆரம்பம் முதல் 1.9.2021 இதுவரையான காலப்பகுதியில் கோவிட்19 தொற்றாளர்கள் 282 பேர், சிகிச்சைகள் பயனின்றி உயிரிழந்துள்ளனரென்று, பதுளை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வெளியிட்டுள்ள கோவிட்19 தொடர்பான விபர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ் அறிக்கைக்கமைய பதுளை -40 பேர், பண்டாரவளை -33 பேர், எல்ல – அறுவர், ஹல்துமள்ள, ஒன்பது பேர், ஹாலி எல -35 பேர், ஹப்புத்தளை 22பேர், கந்தகெட்டிய இரண்டுபேர், லுணகலை- ஒன்பதுபேர், மகியங்கனை -29 பேர், மீகாகிவுல- அறுவர், பசறை -18 பேர், ரிதிமாலியத்த – ஏழுபேர், சொராணாதொட்ட நான்குபேர், ஊவா- பரனகமை -21பேர். வெளிமடை -41பேர் என்றவகையில் பதுளை மாவட்டத்தில்; 15 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் 282 பேர் கோவிட் 19 தொற்றினால் உயிரழந்துள்ளனர். 30.08.2021, 31.08.2021 , 1.09.2021 ஆகிய மூன்று நிலைங்களில் 32 பேரின்மரண அதிகரிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் 19 ஆயிரத்து நானூற்று முப்பத்தொறு பேர் , கோவிட்19 தொற்றளார்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கோவிட்ட 19 சிகிச்சை நிலையங்களிலும் , கணிசமானவர்கள் பொது சுகாதாரப் பரிசோதர்களின் கண்காணிப்புக்களுடன் தத்தம் வீடுகளிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இவ்வகையில் பதுளை -2782 பேர், பண்டாரவளை -1656 பேர், எல்ல 988பேர், ஹல்துமுள்ள- 880பேர்,ஹாலிஎல -1487 பேர், ஹப்புத்தளை – 1235பேர், கந்தகெட்டிய -548பேர், லுணுகலை – 764பேர் மகியங்களை – 2716 பேர், மீகாகிவுல -334 பேர், பசறை -1227பேர் , ரிதிமாளியத்த -1496 பேர் , சொரணாதொட்ட 391 பேர், ஊவா- பரனகம -1080 பேர், வெலிமடை -1852 பேர் என்றடிப்படையில் பத்தொன்பதாயிரத்து நானூற்று முப்பத்தாறுபேர் தொற்றாளர்களாக இதுவரையில் காணப்பட்டுள்ளனர்(19436)

இப்புள்ளிவிபரப்பட்டியளில் பதுளை மாவட்ட அரச அதிபர் செயலகமும் ஊர்ஜிஜம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles