கொரோனாவால் பதுளை SI உயிரிழப்பு

பதுளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக பதுளை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இந்த உப பொலிஸ் பரிசோதகர் கடந்த 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்தவராவார்.

Related Articles

Latest Articles