கொரோனாவால் மேலும் ஒருவர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (02.01.2024) இரவு உயிரிழந்துள்ளார்.

அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles