‘கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்’

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கர்ப்பிணி பெண்ணொருவர் இன்று ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

புத்தளம் ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவர் ஒரு மாதத்துக்கு முன்னர் கொவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் பிரவசத்துக்காக அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று பிரசவம் இடம்பெற்றுள்ளது.

தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Articles

Latest Articles