கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பணம் மற்றும் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 15 ஆம் திகதியே சிலர், சுகாதார நடைமுறைகளைமீறி சட்டவிரோதமாக இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளியிடங்களில் இருந்தும் வந்துள்ளனர்.
இது தொடர்பில் குறுந்துவத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி விஜேரத்திரவின் வழிகாட்டலில், குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி முனசிங்க தலைமையில் மதநாயக்க மற்றும் புத்திவர்தன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர். எழுவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையோரை கைது செய்வதற்கான தேடுதல் தொடர்கின்றது. மூன்று ஆட்டோக்களும், சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட பணமும் பொலிஸாரால் மீடக்கப்பட்டுள்ளன. கைதானவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.