கொரோனா – அவதானம்மிக்க மூன்று மாவட்டங்கள்…

கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மூன்று மாவட்டங்களும் அதிக அவதானமிக்க மாவட்டங்க​ளென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்த மாவட்டங்களில் நாளாந்தம்அடையாளம் காணப்படும் கொவிட்19 தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தற்போது மிகவும் அவதானமான நிலைமை காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுக்கின்றார். மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களை மாத்திரமன்றி, இலங்கையின் ஏனைய சில பகுதிகளிலும் கொவிட்19 தொற்று திடீரென அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த வாரம், மிகவும் பொறுப்புடன் செயற்படுமாறு தாம் பொது மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமென தாம் எதிர்பார்த்த போதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லையென அவர் கூறுகின்றார். இந்த நிலைமையின் கீழ், பொதுமக்கள் 100 வீதம் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

Latest Articles