கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமாயின், பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
எனவே, பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் எனவும், இயலுமானவரை வீடுகளிலிருந்து பணிபுரியுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும் எனவும் அவர் எதிர்வுகூறினார்.











