கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபரிடம் கஞ்சா வாங்குவதற்காக வருகை தந்திருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை, கொட்டிகும்புர பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிந்தெனிய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மேற்படி அறுவரும், கேகாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும் அதனைமீறிச் செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டுதான் இருக்கின்றது. நாளாந்தம் சுமார் 600 இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்படும் நிலைமை காணப்படுகின்றது.