கொரோனா மரண எண்ணிக்கை 35 வீதத்தால் அதிகரிப்பு!

உலகெங்கும் கடந்த 4 வாரங்களில் கொரோனா இறப்பு 35 வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருகிறது. தொற்று பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், “கொரோனா தொற்றுடன் வாழக் கற்றுக்கொண்டதால் தொற்று பாதிப்பு இல்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது. தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், மற்றவர்களைப் பாதுகாக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

உலகம் முழுவதும் கடந்த நான்கு வாரங்களில் கொரோனா, குரங்கம்மை உள்ளிட்ட உலகளாவிய நோய்கள்் தொடர்பான இறப்புகள் 35 வீதம் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் மட்டும் கொரோனாவுக்கு 15,000 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கும்போது இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார். மேலும், குரங்கம்மை குறித்து பேசிய அவர், “கடந்த வாரம் 7,500 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய வாரத்தைவிட பாதிப்பு 20 வீதம் அதிகமாகும். தற்போது வரை 92 நாடுகளில் 35,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.

Related Articles

Latest Articles