கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 570 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 7 ஆயிரத்து 636 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 146 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, நாவலப்பிட்டிய பகுதியில் உயர்தர மாணவியொருவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அவர் பேராதனை, பெனிதெனில பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவருடன் தொடர்பைபேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.