கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியதும், கூடாததும்

சீனாவின் வுஹானில் தொடங்கிய நோயான கொவிட்-19 என்றால் என்ன?

COVID-19 என்பது இதற்கு முன்பதாக நாம் தெரிந்திராத கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும். ஏனைய கொரோனா வைரஸ்களைப் போலவே, இது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு வந்துள்ளது. இது உங்கள் நுரையீரல் மற்றும் சுவாசப் பாதைகளை பாதிக்கும் புதிய நோயாகும்.

இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் அறிகுறிகள் யாவை?

இந்த வைரஸ் நிமோனியாவை ஏற்படுத்தும். கொரோனாவால் நோய்வாய்ப்பட்டவர்கள் இருமல், காய்ச்சல், சுவாச சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். நோய் தீவிரமாகும் நிலையில் உறுப்பு செயலிழப்பு ஏற்படலாம். இது வைரஸ் நிமோனியா என்பதால், அன்டிபயோடிக்ஸ் (antibiotics) பயனளிக்காது. காய்ச்சலுக்கு எதிராக நம்மிடம் உள்ள அன்டி-வைரல் மருந்துகள் இயங்காது. இந்த வைரசிலிருந்து மீண்டுவருதல் என்பது எமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைப் பொறுத்தது. கொரோனாவால் இறந்தவர்களில் பலர் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர்.

எனக்கு இருமல் இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டுமா?

இருமல் அல்லது அதிக உடல் வெப்பநிலை உள்ள எவரும் 14 நாட்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உட்பட பிறரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது மருத்துவ ஆலோசனையாகும். இது அனைவருக்கும் பொருந்தும். உடல்நிலை மோசமானால், அல்லது உங்கள் அறிகுறிகள் ஏழு நாட்களுக்கு மேல் நீடித்தால், நீங்கள் 117 ஐ அழைக்க வேண்டும். மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்கு முகமூடி அணிந்துகொள்ளுங்கள்.

பொது சுகாதர அதிகாரி (PHI), சுகாதார மருத்துவ அதிகார (MOH), பிராந்திய தொற்றுநோய் வல்லுநர் (RE) ஆகியோருக்கு அறிவிக்கவும்.

இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறதா?

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் ஜனவரி மாதத்தில் இந்த வைரஸ் மனிதனுக்கு மனிதன் பரவுவதை உறுதிப்படுத்தியது. இப்போது உலகம் முழுவதும் மனித பரவலுக்குள்ளாகியுள்ளது.

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

இது ஒரு புதிய நோய் என்பதால், கொரோனா வைரஸ் ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு பரவுகிறது என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால் இந்த நோய் மூச்சினால் பரவக் கூடியதாக் கருதப்படுகிறது. எச்சில், இருமல் துளி, தொற்றுகளை ஏற்படுத்தும் துணி, பாத்திரங்கள், தளபாடங்களினால் பரவக்கூடியதாக் கூறப்படுகிறது.

எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?

மார்ச் 15 ஆம் திகதி வரை, 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 156,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது.

உலகளவில் 5,800 இற்கும் மேற்பட்ட இறப்புகள் நேர்ந்துள்ளன. அவற்றில் 3,000 இற்கும் மேற்பட்டவை சீனாவில் நிகழ்ந்துள்ளன. கொரோனா வைரஸிலிருந்து 73,000 இற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

இது சாதாரண காய்ச்சலை விட ஏன் மோசமானது? வல்லுநர்கள் எவ்வளவு கவலைப்படுகிறார்கள்?

புதிய கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்று இன்னும் தெரியவில்லை, மேலும் கூடுதல் தகவல்கள் வரும் வரை தெரியாது. பருவகால காய்ச்சல்கள் பொதுவாக 1% இற்கும் குறைவான இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதுடன், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400,000 இறப்புகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. சார்ஸின் இறப்பு விகிதம் 10% க்கும் அதிகமாக இருந்தது.

அறியப்படாத மற்றொரு முக்கிய விடயம், கொரோனா வைரஸ் எவ்வளவு தொற்றும் தன்மையுடையது என்பதாகும். ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், ஏனைய காய்ச்சல்களைப் போலன்றி, புதிய கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி இல்லை. அதாவது பாதிக்கப்படக்கூடியவர்களான வயதானவர்கள் அல்லது ஏற்கனவே சுவாச அல்லது நோயெதிர்ப்பு பிரச்சினை உள்ளவர்கள் – தங்களைக் காப்பாற்றிக் கொள்வது மிகவும் கடினம்.

வேறு கொரோனா வைரஸ்கள் இருந்ததா?

Severe acute respiratory syndrome (சார்ஸ்) மற்றும் Middle Eastern respiratory syndrome (மெர்ஸ்) இரண்டும் விலங்குகளிடமிருந்து வந்த கொரோனா வைரஸ்களால் ஏற்படுகின்றன. 2002 ஆம் ஆண்டில், சார்ஸ் கிட்டத்தட்ட 37 நாடுகளுக்குத் தடையின்றி பரவி, உலகளாவிய பீதியை ஏற்படுத்தியது, 8,000 இற்கும் அதிகமான மக்களைப் பாதித்ததுடன், 750 இற்கும் மேற்பட்டோரைக் கொன்றது. மெர்ஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு எளிதில் கடத்தப்படுவதாகத் தோன்றுகிறது, அதிக மரணம் கொண்டது, பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேரில் 35% பேர் கொல்லப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பீடிப்பதை அல்லது பரவுவதைத் தவிர்ப்பது எப்படி?

  • உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கழுவவும் – இதை குறைந்தது 20 விநாடிகள் செய்யுங்கள்
  • நீங்கள் வீட்டிற்கு வரும்போது அல்லது வேலைக்குச் செல்லும்போது எப்போதும் கைகளைக் கழுவுங்கள்
  • சோப்பு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் சானிடிசர் ஜெல் (hand sanitiser gel) பயன்படுத்தவும்
  • உங்கள் கைகள் சுத்தமாக இல்லாவிட்டால் உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடாதீர்கள்
  • நீங்கள் இருமும் போதோ தும்மும் போதோ உங்கள் வாய் மற்றும் மூக்கை ஒரு திசுவால் (tissue) மூடிக்கொள்ளவும்.
  • பயன்படுத்தப்பட்ட திசுக்களை உடனடியாக அப்புறப்படுத்தி, பின்னர் உங்கள் கைகளை கழுவவும்
  • முகமூடி அணிந்துகொள்ளவும்.
  • உடல்நிலை சரியில்லாதவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க முயற்சிக்கவும்

கொரோனா வைரஸுக்கு சிகிச்சை?

  • கொரோனா வைரஸுக்கு தற்போது குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) வைரஸ்களுக்கு எதிராக செயல்படாததால், அவை கொரோவை தடுக்க உதவாது.
  • இந்த வைரசிலிருந்து மீண்டுவருதல் என்பது எமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைப் பொறுத்தது.
  • நோயெதிர்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் குணமடையும் வரை மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும்.

வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருத்தலுக்கான உதவிக் குறிப்புக்கள்?

  • ஏனையோரிடமிருந்து குறைந்தது 2 மீட்டர் (3 அடிகள்) விலகியிருக்க முயற்சி செய்யுங்கள்
  • முடிந்தால் தனியாக தூங்குங்கள்
  • உங்கள் கைகளை சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் குறைந்தது 20 விநாடிகள் கழுவுங்கள்
  • ஏராளமான தண்ணீர், நீராகாரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

கீழ்வரும் அறிகுறிகளில் ஏதாவதொன்று உங்களுக்கு உள்ளதா?

  • அதிக வெப்பநிலை – உங்கள் மார்பில் அல்லது பின்புறத்தில் தொடும்போது நீங்கள் சூடாக உணர்கிறீர்கள்
  • ஒரு புதிய தொடர்ச்சியான இருமல் – இதன் பொருள் நீங்கள் மீண்டும் மீண்டும் இருமுகிறீர்கள்

உங்கள் வழமையான அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திவிடும் அளவுக்கு நீங்கள் மோசமாக இருக்கிறீர்களா?

(டிவி பார்ப்பது, தொலைபேசி பயன்படுத்துவது, படிப்பது, படுக்கையில் இருந்து எழுவது போன்ற வழக்கமான எதையும் செய்ய முடியாத அளவுக்கு உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதா)

ஆம் எனில், 117 ஐ அழைத்து உடனடியாக உதவியைப் பெறுங்கள். கொரோனா வைரஸ் அறிகுறி தென்படுவதாகக் கூறுங்கள். மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்கு முகமூடி அணிந்துகொள்ளுங்கள்.

பொது சுகாதர அதிகாரி (PHI), சுகாதார மருத்துவ அதிகார (MOH), பிராந்திய தொற்றுநோய் வல்லுநர் (RE) ஆகியோருக்கு அறிவிக்கவும்.

உதவி கிடைக்கும்வரை ஏனையோரிடமிருந்து விலகி இருங்கள்.

உங்கள் நிலமை மோசமாக இல்லை எனில், நீங்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும். குறைந்தது அடுத்த 7 நாட்களுக்கு ஏனையோரிடமிருந்து குறைந்தது 2 மீட்டர் (சுமார் 3 அடிகள்) விலகி இருங்கள்.

  • வீட்டியல் நீங்கள் செய்ய வேண்டியவை?
  • ஓய்வெடுத்து ஏராளமான நீராகாரம் அருந்தவும்.
  • இருமல் அல்லது தும்மும்போது வாயை ஒரு திசுவால் மூடிக்கொள்ளவும். பயன்படுத்தப்பட்ட திசுக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும்.
  • உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்புடன் குறைந்தது 20 விநாடிகள் கழுவ வேண்டும்
  • உங்கள் அறிகுறிகளை வீட்டிலேயே சமாளிக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் அல்லது உங்கள் நிலை மோசமடைகிறது என்றால் 117 இற்கு அழைத்து அவசர உதவியை பெற்றுக்கொள்ளவும்.

நீங்கள் வீட்டில் தங்குவதை எப்போது முடிக்க வேண்டும்?

உங்கள் அறிகுறிகள் தொடங்கிய 7 நாட்கள் வரை நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். 7 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் நன்றாக உணர்ந்தால், அதிக வெப்பநிலை இல்லை என்றால், நீங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.

உங்களுக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை எனில், நீங்கள் இயல்பாக இருக்கிறீர்கள். உங்களுக்கு இருமல் இல்லை, அதிக உடல் வெப்பநிலை இல்லை. உங்களுக்கு கொரோனா வைரஸின் (COVID-19) அறிகுறிகள் தென்படவில்லை.

  • தொகுப்பு – நிருஷா கனகசபை
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles