இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.