‘கொரோனா 2ஆவது அலை ஏற்பட்டால் முழு பொறுப்பையும் அரசு ஏற்கவேண்டும்’

இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படும் பட்சத்தில் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அக்குரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கொரோனா வைரஸ் தொடர்பில் நான் நாடாளுமன்றத்தில் முன்கூட்டியே எச்சரித்திருந்தேன். ஆனால், அவசர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாம் அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், தேர்தலை நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. எனவே, வைரஸ் மீண்டும் சமூகததில் பரவும்பட்சத்தில் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles