கொள்கலன்கள் பற்றிய விசாரணை அறிக்கை மறைக்கப்படுவது ஏன்?

“துறைமுகத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வெளியிடாமல், பதுக்கி வைத்திருப்பது ஏன்”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” துறைமுகத்தில் இருந்து 309 கொள்கலன்கள் விசாரணையின்றி விடுவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரிப்பதற்கு ஜனாதிபதியால் விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும், அது இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில்கூட சமர்ப்பிக்கப்படவில்லை.
அறிக்கையை ஜனாதிபதி ஒளித்து வைத்துள்ளார். கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் அறிக்கையில் சர்ச்சைக்குரிய விடயங்கள் இருப்பதாலேயே அது வெளியிடப்படாமல் உள்ளது என்ற சந்தேகம் எழுகின்றது. இதன் பின்புலத்தில் தவறு இருக்கலாம் என்பதாலேயே அரசாங்கமும் மௌனம் காத்துவருகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles