கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் காலி நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 18 வயதுடைய கேகாலை களுகல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்