கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதி கைது

கர்ப்பிணி மனைவியை, காவலில் வைத்துவிட்டு , வீடொன்றில் தங்க நகைகளை திருடிய நபரையும் அவரது மனைவியையும் கைது செய்ததாக பாணந்துறை வடக்கு பொலிசார் தெரிவித்தனர்.

இக்கொள்ளைச் சம்பவம் பாணந்துறை வடக்கு, திக்கல, பராக்கிரம மாவத்தையிலுள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்களான தம்பதியினரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது , 4 லட்ச ரூபா பெறுமதியான தங்கமாலை, பஞ்சாயுதம், மூன்று மோதிரங்கள் மற்றும் பென்டன் ஒன்றும், ஐந்து கிராமுக்கு அதிகமான ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளரான பெண் தனது மகனை அழைத்துவர பாடசாலை சென்றபோது இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles