கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

அதன்படி, சனிக்கிழமை (15) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (16) காலை 10.00 மணி வரை நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles