மஸ்கெலியா பொது சுகாதார அலுவலக பிரிவுக்குட்பட்ட டிக்கோயா, காபெக்ஸ் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு, கிருலபனை பகுதியிலிருந்து கடந்த 11 ஆம் திகதி ஊருக்குவந்த 44 வயதுடைய குறித்த நபரிடம் கலுகல்ல பகுதியில் வைத்து பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பிரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவருடன் தொடர்பில் இருந்த சுமார் 22 பேர் அவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் நாளை பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன.
தொற்றுக்குள்ளானவர் அம்பாந்தோட்டடையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்










