பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஹுல்வத்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இன்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு, கொட்டாவ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் வேலைசெய்த இவர், தனது சொந்த ஊரான பசறை கோணக்கலை புஹுல்வத்தவுக்கு அண்மையில் வந்துள்ளார்.
கொழும்பில் இருந்து வந்ததால் அவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டார். அதன்பின்னர் அவரிடம் பிரிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பிரிஆர் பரிசோதனை முடிவு இன்று வெளியானது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தயதலாவ காகொல்ல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.










