கொழும்பில் இருந்து கலஹா வந்த இளைஞனுக்கு கொரோனா!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா – வீசந்திரமலை பகுதியில் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கடந்த 9 ஆம் திகதி ஊருக்கு வந்த இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய வலயமான மேல்மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், கொழும்பு 4 ஆம் குறுக்கு தெருவில் உள்ள கடையொன்றில் பணியாற்றிய குறித்த இளைஞன் கடந்த 9 ஆம் திகதி பேலியகொடை நகருக்குசென்று அங்கிருந்து லொறியொன்றில் ஏறி பேராதனைக்கு வந்துள்ளார்.

பேராதனையில் இருந்து ஆட்டோமூலம் கலஹாவுக்கு சென்று அங்கிருந்து வீட்டுக்குசென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரிடம் கடந்த 12 ஆம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளிவந்தன. இதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவர் பொல்கொல்ல வைத்தியசாலைக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொண்டுசெல்லப்பட்டார்.

Related Articles

Latest Articles