உள்ளாட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கு மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை களமிறக்குவது குறித்து ஐக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்துவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே பைசரை களமிறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாம்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரான பைசர் முஸ்தபா, அக்கட்சியில் அனைத்து பதவிகளில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை கட்சி தலைவருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அதேவேளை, கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக முஜிபூர் ரஹ்மானை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
