கொழும்பு, கொம்பனி வீதியில், யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8வது மாடியில் இருந்து விழுந்து சீன பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உதவி பொறியியலாளராக பணியாற்றிய 24 வயது சீனர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 5 மணியளவிலேயே இவர், கட்டடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த சீன இளைஞன், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
