கொழும்பு துறைமுகத்தில் அலிசன் ஹூக்கர்

இலங்கை வந்துள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன் போது அவர், இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அவருடன் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

வர்த்தகம் மற்றும் துறைமுக மீள்தன்மையில் அமெரிக்க-சிறிலங்கா கூட்டாண்மை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

பொருளாதாரங்களுக்கு உயிர்நாடியாகவும், உலகளாவிய பாதுகாப்பிற்கான முன்னணியாகவும் இந்தியப் பெருங்கடல் மூலோபாய முக்கியத்துவத்தை வாய்ந்ததாக உள்ளது என இருதரப்பினரும் வலியுறுத்தினர்.

வணிகத்தை நகர்த்துவதற்கு வலுவான துறைமுகங்கள் அவசியம் என்று இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles