கொழும்பு துறைமுக நகர விசேட வர்த்தக ஆணைக்குழு சட்டமூலம்மீது நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்துக்கு கிடைக்காததாலேயே விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
