பல்கலைக்கழக மாணவியை பலியெடுத்த ‘டெங்கு’!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த பல்கலைக்கழக மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவியான 23 வயதான ஹசினி பாக்யா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கடந்துள்ள 15 நாட்களில் மாத்திரம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

Latest Articles