கொழும்பு மாநகரசபை பட்ஜட் இன்று நிறைவேறுமென அரசு நம்பிக்கை!

அரசியல் ரீதியிலான கேம் எதுவும் இடம்பெறாவிட்டால் கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேறுமா என கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

“ மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தியே வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொழும்பு மக்களின் வாழ்க்கை மேம்படும். எனவே, மக்களுக்கு நன்மை பயக்க வேண்டுமெனில் பாதீடு நிறைவேற வேண்டும்.

அவ்வாறு பாதீடு நிறைவேறும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

வரவு- செலவுத் திட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் விவாதத்தின்போது உறுப்பினர்களால் தகவல்களை வெளியிட்டிருக்க முடியும்.

அவ்வாறு செய்யாமல், அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டே வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றே நான் கருதுகின்றேன். எனவே, அன்று எதிராக வாக்களித்தவர்கள், நாளை ஆதரவாக வாக்களிப்பார்கள் என நம்புகின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles