கொழும்பு வைத்தியசாலையில் 27 வைத்தியர்களுக்கும், 105 தாதியர்களுக்கும் கொரோனா

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட 265 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

27 வைத்தியர்கள், 105 தாதியர்கள் மற்றும் 133 சுகாதார ஊழியர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதுவரை 600 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

Related Articles

Latest Articles