கொவிட்: உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையத்திற்குப் பூட்டு

உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையமாக உள்ள மக்காவுவில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன.

30க்கும் அதிகமான சூதாட்ட விடுதிகள் உட்பட அத்தியாவசிமற்ற வர்த்தகங்களை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் சிறப்பு நிர்வாகத்தில் உள்ள இந்த நகரில் கடந்த ஜூன் நடுப்பகுதி தொடக்கம் 1,526 கொவிட் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக உத்தியோகபூர்வ தரவுகள் கூறுகின்றன.

இந்தக் கடுமையான விதிகள் காரணமாக சூதாட்டப் பங்குகள் நேற்று திங்கட்கிழமை வீழ்ச்சி கண்டன.

2020 ஆரம்பத்திற்குப் பின்னர் இந்த நகர் மிக மோசமான கொ​ேரானா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுமார் 19,000 பேர் மீது கட்டாய தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மதுபான விடுதிகள், திரையரங்குகள் உட்பட பாடசாலைகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles