கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தொடர்பில் விசேட கவனம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் கொவிட்-19 தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின், பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தமது பரீட்சைக்குரிய தினத்திற்கு முன்தினமே, மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள விசேட கொவிட் பரீட்சை நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு, அவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் உரிய வகையில் வழங்கப்படும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவரானி புனிதா குறிப்பிட்டார்.

நாளைய தினம் முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரை, 2,437 பரீட்சை மையங்களில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

345, 242 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அவர்களில், 279, 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66, 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

Related Articles

Latest Articles