பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொஸ்லாந்தை – கொடப்கம கிராமத்தில் இன்று (11) மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் 4 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் ஏ.கே.ஜே பிரியங்கிகா தெரிவித்தார்.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் உறவினர் வீடுகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் காணிகளை ஆய்வு செய்ய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உரிய ஆய்வு அறிக்கைகள் மற்றும் அவர்களின் முடிவுகளுக்கு ஏற்ப தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ராமு தனராஜா










