கொஸ்லாந்தை வெலன்விட்ட நூறு ஏக்கர் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் நேற்று (01) பிற்பகல் வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கொஸ்லாந்தை, வெலன்விடவில் வசித்து வந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் , 60 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் வயோதிப தம்பதியினர் தனியாக வசித்து வந்ததாகவும், வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த இவர்களது மகள் புத்தாண்டு முடிந்து பெற்றோரை பார்ப்பதற்காக நேற்று (1) வீட்டிற்கு வந்த போது அவர்கள் இறந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், உயிரிழந்த பெண் வீட்டுக்கு மின்சாரம் வழங்கும் மின்சார வயரைப் பிடித்துக் கொண்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.
வீட்டிற்கு அருகில் இருந்த மரமொன்றை குறித்த பெண் வெட்டிய போது அது மின் கம்பியில் விழுந்து வயர் உடைந்ததுள்ளது. கம்பியை அகற்ற சென்ற போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் வீட்டிற்கு செல்லும் வீதியில் கணவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹன, கொஸ்லந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஓ.பி.துமிந்த விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்










