கோட்டாவின் கடிதம் வராததால் குழப்பம் – நாடாளுமன்றத்தை கூட்டுவதிலும் சிக்கல்

”  தற்போது நான் மிகுந்த அழுத்தத்தில் உள்ளேன். விரைவில் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்புன் என ஜனாதிபதி என்னிடம் கூறினார்.” – என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தற்போது பதில் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியை விட்டுச் சென்றதாகக் கருதி மேற்கொள்ளக்கூடிய சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாகவும் சபாநாயகர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதுவரை ஜனாதிபதி தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காத காரணத்தினால், நாளைய தினம்(15) நாடாளுமன்றத்தை கூட்டுவதிலும் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles