கோட்டை நோக்கி புறப்பட புகையிரதத்தில் இருந்து சடலம் மீட்பு

ரம்புக்கனையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி புறப்பட தயாராகவிருந்த புகையிரதம் ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் கழுத்து பகுதியில் காயமொன்று காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்புக்னை புகையிரத நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.25 மணிக்கு புறப்பட தயாராகவிருந்த புகையிரதத்தின் 3ஆம் வகுப்பு பெட்டியிலிருந்து 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

எனினும் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles