நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கோட்லோஜ் தோட்டத்தின் இலக்கம் 04 தேயிலை மலை உச்சத்தில் அமைந்துள்ள காவல் தெய்வமான கருப்ப சுவாமி ஆலயத்தின் வருடாந்த வேள்வி பூசை அத் தோட்ட பொதுமக்களின் பங்களிப்புடன் ஞாயிற்று கிழமை (12) நடைபெற்றது.
இப்பூசை வழிப்பாட்டில் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சரும் இ.தொ.கா பொது செயலாளருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் பேரில் நுவரெலியா பிரதேச சபை முன்னாள் தலைவர் வேலு யோகராஜ் மற்றும் சபையின் முன்னாள் உறுப்பினர் ஜே.ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கோட்லோஜ் தோட்ட மலை உச்சியில் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பணிப்பிற்கமைய ஜீவன் தொண்டமானால் பிரதிஸ்ட்டை செய்து வைக்கப்பட்ட கருப்பு சுவாமிக்கு தோட்ட மக்கள் பால்குடம் எடுத்து விசேட பூசை வழிப்பாடுகளில் ஈடுப்பட்டனர்.
இதை தொடர்ந்து தோட்ட பொது மக்களுக்கு பகல் அன்னதானம் வழங்கிவைக்கப்பட்டது.
ஆர்.ரமேஷ்










