கோபா குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு: அரசு உறுதி!

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் ( கோபா) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் இன்று (6) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். நீங்கள் அதை கேட்கவில்லை. அதேபோன்று அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவர் பதவி ஆளுங்கட்சிக்கு தேவை என்று கூறினோம். முதல் காலகட்டத்தில், முந்தைய அரசாங்கத்தின் விடயங்களை பரிசீலிக்க வேண்டும். அந்த அரசின் அமைச்சர் ஒருவர் கோப் குழுவின் தலைவராக வருவதை நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

Related Articles

Latest Articles