அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் விலகியுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்புவேளையின்போதே பிரதி சபாநாயகரால் மேற்படி தகவல் வெளியிடப்பட்டது.
அவரது வெற்றிடத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
