கோப், கோபா உட்பட 70 பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள் கலைப்பு!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் கோப், கோபா உள்ளிட்ட சுமார் 70 நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள் கலைக்கப்பட்டுவிடும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கிணங்க 9ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது சபை அமர்வு ஆரம்பமானதன் பின்னர் தெரிவுக் குழுக்கள் உருவாக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை இதுவரை பாராளுமன்றத்தின் மூலம் கவனத்திற் கொள்ளப்படாத யோசனைகள் மட்டும் கேள்விகள் கூட்டத்தொடர் நிறைவுறுவதோடு ரத்துச் செய்யப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் மற்றும் யோசனைகளை மீள முன்வைத்து நிலையியற் கட்டளைக்கு இணங்க செயற்பட வேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் கூட்டத்தொடர் நிறைவு பெற்றாலும் பாராளுமன்ற இணைப்பு தெரிவுக்குழு, கண்காணிப்பு தெரிவுக் குழு ஆகியன உள்ளிட்ட சில தெரிவுக் குழுக்கள்கலைக்கப்படமாட்டாது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் 2020 ஆகஸ்ட் 20 முதல் 2021 டிசம்பர் 12 வரையும், 02ஆவது கூட்டத் தொடர் 2022 ஜனவரி 18ம் திகதி முதல் 2022 ஜூலை 28ம் திகதி வரை நடைபெற்றன.

அதேவேளை 9ஆவது பாராளுமன்றத்தின் 03ஆவது கூட்டத் தொடர் 2022 ஆகஸ்ட் 03ம் திகதி ஆரம்பமானதுடன் கடந்த 2023 ஜனவரி 27ம் திகதி கூட்டத்தொடர் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles