நாட்டில் கோழி முட்டை நுகர்வு 80 சதவீதத்தால் குறைந்துள்ளமையால் எதிர்காலத்தில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என நுகர்வு கோழி முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முட்டை உற்பத்தி செலவு 35 சதவீதம் உயர்ந்துள்ளது, தற்போது மிகப்பெரிய கோழிப்பண்ணைகளில் 50 சதவீதம் மட்டுமே செயற்பட்டு வருகிறது.
முழுமையாக மூடப்பட்ட கோழிப்பண்ணைகள் மற்றும் கிராம மட்டத்தில் இயங்கி வந்த 80 வீதமான கோழிப்பண்ணைகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கோழிப்பண்ணை தொழிலுக்கு தேவையான பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதாலும், தேவையான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாகவும் கிராமப்புற சிறுதொழிலாக இருந்த கோழிப்பண்ணை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோழிப்பண்ணை நடத்தி வந்த பலர், பழைய தொழில்களை கைவிட்டு, வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட நாட்டின் பல பிரச்சினைகள் தீரும் வரை கோழி முட்டையின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.










