2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் டிசம்பர்வரையே உயர்தரப்பரீட்சையை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் ஆறு வாரங்களுக்கு பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே இன்று புதிய திகதி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.










